திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி சாலையில் புதுப்பொலிவுடன் 3 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகின்றன. தற்பொழுது பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பேருந்து நிலையத்தின் வெளிப்புறச் சுவற்றில் வண்ண வண்ண நிறங்களில் வர்ணம் தீட்டப்பட்டு வருகின்றது அத்துடன் தமிழ்நாடு என்ற பெயரில் ஒரு அழகான ஓவியமும் ஓவிய கலைஞர்களால் வரையப்பட்டு வருகின்றது இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது புத்தம் புதியதாய் புதிய பொலிவுடன் தயாராகி வரும் பேருந்து நிலையம் திறப்பு விழாவில் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.