சமீப காலமாக BSNL சிம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு BSNL நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.2,399 பிரீபெய்ட் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 30 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னர் இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்களாக இருந்த நிலையில், இந்த சலுகையின் காரணமாக 425 நாட்களாக அதிகரித்துள்ளது.