உகாண்டா நாட்டை சேர்ந்த 2 பெண்கள் கைது

72பார்த்தது
உகாண்டா நாட்டை சேர்ந்த 2 பெண்கள் கைது
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருக்கும் வெளிநாட்டினரை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அவினாசி தேவம்பாளையத்தில் வெளிநாட்டை சேர்ந்த 2 பெண்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அந்த பெண்களின் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டை சேர்ந்த எவலின்டினா (34), நகான்வாகி ஐஷா (31) என்பதும், விசா காலக்கெடு முடிவடைந்தும் நீண்ட காலமாக தங்கியிருப்பதும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி