மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் இல்லை அறிவித்துள்ள அதிமுக, 2026 தேர்தலில் சீட் வழங்கப்படும் என தெரிவித்தது. இதுகுறித்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, "2026 தேர்தலில் தேமுதிக தங்கள் கடமையை நிறைவேற்றும். தேர்தலை ஒட்டியதே அரசியல் நிலைபாடு இருப்பதால் எங்களின் நிலைபாடும் அப்படியே இருக்கும். கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம். ராஜ்ய சபா சீட் குறித்து 2024 தேர்தலில் அதிமுகவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது" என்றார்.