"மதுரைக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது?" - அதிமுக அறிக்கை

4794பார்த்தது
"மதுரைக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது?" - அதிமுக அறிக்கை
மதுரையில் இன்று (ஜூன் 1) திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், "மதுரைக்கு சொன்ன எதேனும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா?” என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அதில், “வாக்குறுதி அளித்த வேளாண் பல்கலைக்கழகம் எங்கே?, போட்டித் தேர்வுகள் மையம் எங்கே?, தொழில் வழித் தடம் எங்கே?, வர்த்தக மையம் எங்கே?, மதுரை மெட்ரோ எங்கே. வெற்று விளம்பரங்களால் 4 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை மறைக்க முயற்சிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி