தமிழ்நாட்டில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். 2 இடங்களிலும் அதிமுகவே போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் நடத்திய மறைமுக பேச்சுவார்த்தைகள், நிர்ப்பந்தத்துக்கு அதிமுக அடிபணியவில்லை. அதிமுகவை கூட்டணி கட்சிகள் நிர்ப்பந்திக்க முடியாது என்பதை இபிஎஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.