பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டியில், "யாரும் என்னை இயக்கவில்லை. என் பொதுவாழ்வு மிக நீண்ட பயணம் கொண்டது. பாமக நிர்வாகிகள் நியமனம் மற்றும் நீக்கத்தை பெரிதுப்படுத்த வேண்டாம், நாங்களே அதை பெரிதுப்படுத்தவில்லை. ஒவ்வொரு கட்சியிலும், குடும்பத்திலும் நடப்பது தான் பாமகவிலும் நடக்கிறது. சுதந்திரமாக செயல்படுவது அன்புமணியின் உரிமை. அன்புமணி பாமகவில் இருந்து நீக்கமா என்பதற்கு வரும் வியாழக்கிழமை பதில் அளிக்கிறேன்" என்றார்.