அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இந்த ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் சீட் ஒதுக்கப்படவில்லை. அடுத்தாண்டு தேர்தலில் ஒதுக்கப்படும் எனவும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.