திருப்பூர் மாவட்டம் உடுமலை தென்னை மரத்து வீதியில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நல கட்டடத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர்கே. எஸ் மணி தலைமை வைகித்தார். செயல் தலைவர் செயலாளர் அழகர்சாமி பொருளாளர் ஞானபண்டிதன் , மோகன் ராஜ் ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.
மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்வதற்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க கோரி ரயில்வே பொது மேலாளர் இடம் மனு அளிக்கவும் ஓய்வூதியர்கள் 79 வயது முடிந்து 80 வயது ஆரம்பிக்கும் போது 20 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம்
வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை பரிசீலனைசெய்து கூடுதல் ஓய்வூதியம் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது சங்கத் தலைவராக பணியாற்றிய நடராஜனுக்கு பதிலாக
புதிய தலைவராக கே எஸ் மணி கடந்த 6. 6 23 ல் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து சங்க பரிவர்த்தனைகளில் தலைவராகவும் பொருளாளராக இருந்த ஞான பண்டிதனுக்கு பதிலாக பொருளாளராக சிவராஜ் பண ஓலையில் கையொப்பமிட அனுமதி அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் நிறைவாக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமதாஸ் நன்றி கூறினார்.