உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாயை கொலை செய்துவிட்டு கீழே தவறி விழுந்ததில் உயிரிழந்ததாக நாடகமாடிய அமன் (17) என்ற மாணவர் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குச் செல்வதற்கு கட்டாயப்படுத்தியதால் தாயை கீழே தள்ளியபோது அவர் கீழே விழுந்து தலையில் காயமடைந்து இறந்துள்ளார். உடனே வீட்டை பூட்டிவிட்டு அமன் வெளியில் சென்றுள்ளார். அப்பெண்ணிற்கு பலமுறை செல்போனுக்கு அழைப்பு விடுத்தும் மனைவி பதிலளிக்காததால், வெளியூரில் உள்ள தந்தை அவரின் உறவினரை வீட்டிற்கு அனுப்பியபோது உண்மை தெரியவந்துள்ளது.