உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி அளவிலான பட்டியலை உடுமலை ஆர். டி. ஓ அலுவலகத்தில் ஆர். டி. ஓ ர. ஜஸ்வந்த் கண்ணன் வெளியிட்டார். அதன் படி கடந்த 29. 10. 24-ம் தேதி படி உடுமலை சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 954 ஆண்கள், 1லட்சத்து 37 ஆயிரத்து 727 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 31 பேர் ஆக மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 712 வாக்காளர்கள் உள்ளனர். மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் 29. 10. 2024 ம் தேதி படி 1 லட்சத்து 15 ஆயிரத்து 109 ஆண்கள், 1லட்சத்து 21 ஆயிரத்து 333 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 19 பேர் ஆக மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 461 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு நேற்று முதல் நவம்பர் மாதம் 28-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த மாதம் 16, 17 மற்றும் 23, 24ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேரத்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6- ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
நிகழ்வில் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்