திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் இப்பொழுது ஏழை எளிய மக்களுக்கு அதிமுக ஆட்சியில் இருந்த தாலிக்கு தங்கம் மிக்ஸி கிரைண்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் சபதம் ஏற்போம் என பேசினார். முன்னாள் அமைச்சர்கள் சேம வேலுச்சாமி எம் எஸ் ஆனந்தன் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர் பேரூர் கழக செயலாளர்கள் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்