உடுமலையில் பூக்கள், பழங்களின் விலை உயர்வு

2605பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நாளை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை பூ 400 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் ரூ 700 க்கும், செண்டு மல்லி கிலோ ரூ. 50 இருந்த நிலையில் 400 ரூபாய்க்கும், ரோஸ் 150 ரூபாய்க்கு இருந்த நிலையில் ரூ 400க்கும், செவ்வந்தி பூ ரூ. 200க்கும் வெற்றி வந்த நிலையில் 400 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 60 ரூபாய் இருந்த நிலையில் 350 ரூபாய்க்கும் உட்பட பல்வேறு பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

இதே போல பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. வாழைப்பழம் கிலோ 50 ரூபாய்க்கும் விற்று வந்த நிலையில் 100 ரூபாய்க்கும் ஆப்பிள் கிலோ 200க்கு வந்த நிலையில் 240 க்கும், கொய்யாப்பழம் கிலோ 70 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் இன்று 120 ரூபாய்க்கும், திராட்சை 100 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் 140 க்கும், ஆரஞ்சு கிலோ 110க்கு விற்று வந்த நிலையில் 140க்கும், மாம்பழம் கிலோ 100 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் 160 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் பூக்கள் மற்றும் பழங்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைகளில் குவிந்தனர்.

தொடர்புடைய செய்தி