திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஆர். ஜி. எம் மேல்நிலைப் பள்ளியில் இன்று 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்திய வெற்றி பெற்றது இதன் வெற்றி ஆண்டுதோறும்
ஜூலை 26 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது மேலும் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் நினைவு கூறும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் முறையில் 25வது ஆண்டாக கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கி அண்ணா குடியிருப்பு , பழனி சாலையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தி வீர வணக்கம் செலுத்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் பள்ளியில் விஜய் திவாஸ் மற்றும் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் பள்ளி செயலாளர் நந்தினி ரவீந்திரன் , பள்ளி முதல்வர் சகுந்தலா மணி, மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.