திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கருக்கு திருஉருவ சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென வீரபாண்டிய கட்டபொம்மன் கழகம் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் நகராட்சி அலுவலகம் முன்பு திருஉருவசிலையும் திருமூர்த்தி மலை பகுதியில் மணிமண்டபம் கட்டப்படும் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் இன்று(அக்.9) இதன் திறப்பு விழா உடுமலை நகராட்சி அலுவலகம் பகுதியில் நடைபெற்றது
சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் நகராட்சி அலுவலகம் பகுதியில் அமைக்கப்பட்ட எத்தலப்பர் முழு உருவ சிலையும், திருமூர்த்தி மலையில் அமைக்கப்பட்ட மணிமண்டபமும் திறந்து வைக்கப்பட்டது. அப்போது 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாரம்பரியமான தேவராட்டம் ஆடியும் பட்டாசுகள் வெடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.