உடுமலையில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு

78பார்த்தது
உடுமலை மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வைத்துறை சார்பில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உடுமலை தாலுகா அலுவலகம் அருகே கலைக்குழுவினர் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலைக்குழுவினர் ஆடல் பாடல்கள் மூலமாகவும், நேரடியாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 

அப்போது கள்ளச்சாராயம் குடிப்பதினால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாகவும் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்வை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி