உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் உடுமலை மகளிர் காவல் நிலையம் சார்பாக போக்சோ விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் சரவணன் வரவேற்புரை வழங்கினார் உடுமலை மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் (பொறுப்பு) அமுதவல்லி போக்சோ சட்டமும் விழிப்புணர்வும் என்னும் தலைப்பில் பேசினார் அவர் தன் சிறப்புரையில் மாணவர்கள் ஒழுக்கத்தை பேண வேண்டும் பெண் குழந்தைகள் தற்சார்புடன் சுய ஒழுக்கமும் பாதுகாப்புடன் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒன்றாக இருப்பதால் பெண் குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும் சமூகச் சூழலாலும் குடும்பச் சூழலாலும் தவறான பாதைகளில் பெண் குழந்தைகள் செல்வதை தடுக்க பல்வேறு ஆலோசனைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று தம் சிறப்பு உரையில் குறிப்பிட்டார் போதை தவறான பாதை என்னும் தலைப்பில் உடுமலை மகளிர் காவல் நிலைய துணை ஆய்வாளர் ருக்மணி தேவி சிறப்பு போக்சோ சட்டம் குறித்து சிறப்பு உரை யாற்றினர்.