திருப்பூர் மாவட்டம் உடுமலை எல். ஐ. சி கிளை அலுவலகம் முன்பு எல். ஐ. சி முகவர்கள் இரண்டாவது முறையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு முகவர்கள் அலாவுதீன், லிங்குசாமி வேலாயுதம் செல்வகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். அதைத் தொடர்ந்து முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டத்தை IRDA ஆணையம் கைவிடக் கோரி வலியுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் போனஸ் தொகை அதிகரித்து வழங்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கமிஷன் சதவீதத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், முகவர்களுக்கான மெடிக்கல் வயதை 80-ஆக அதிகரிக்க வேண்டும், பாலிசிதாரர்களின் பாலிசி லோனுக்கு வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், முகவர்களுக்கு உரிய குரூப் இன்சூரன்ஸ் வயது வரம்பு அதிகரித்து வழங்க வேண்டும். பாலிசி பிரீமியத்துக்குரிய ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரேம்சந்த் விளக்கமாக எடுத்து உரைத்தார். கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டனர்.