திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே நுழை யும் பகுதியில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் வழியை ஆக்கி ரமித்து நிறுத்தி வைக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங் களில் இங்கு பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பிற பஸ் கள் செல்வதற்கு இடமின்றி டிரைவர்கள் மிகவும் சிரமப்படு கின்றனர். குறிப்பாக பஸ்கள் அதிகமாக இயக்கப்படும் நேரத் தில் இங்கு பஸ்கள் நிற்கும் போது பிற பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல் பஸ் நிலையத்தின் வெளியே நீண்ட தூரத் திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பஸ்நிலையத்தின் வெளியே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் பஸ் நிலையத்தின் உள்ளேயும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி பஸ்கள் வழியை ஆக்கிரமித்து நிற்பதால் பய ணிகள் நடந்து செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் நிறுத்தப்பட்டுள்ள பஸ்களுக்கு இடையே அங்குமிங்கு மாக பயணிகள் செல்வதால் வெளியே இருந்து வரும் பஸ்க ளால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தின மும் இந்த நிலை தொடர்வதால் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் பஸ்நிலையத்திற்குள் சென்று வருகின்றனர். ஒரு சில டிரைவர்கள் செய்யும் தவறால் அனைத்து பஸ் டிரைவர் களும் பஸ்சை ஓட்டி செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
எனவே ஒவ்வொரு பஸ்களையும் அதற்குரிய பகுதியில் முறை யாக நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.