ரயில் தண்டவாளத்தை கடக்கும் வகையில் கட்டப்பட்ட சுரங்க பாலத்தில் பக்கவாட்டு சுவரில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருவதால் பாலம் பலமிழக்கும் அபாயம்.
திருப்பூர் மையப்பகுதியை ரயில் தண்டவாளம் வடக்கு தெற்கு என இரண்டாக பிரிக்கும் நிலையில் ரயில் தண்டவாளத்தை கடக்க ஒரு மேம்பாலம் மட்டுமே உள்ளது இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக லட்சுமி நகர் குமரன் சாலையை இணைக்கும் விதமாக மற்றும் ஒரு சுரங்க பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த பாலம் திறக்கப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் இருந்து லேசாக கசிய துவங்கிய தண்ணீர் தற்பொழுது வேகமாக பீய்ச்சி அடிக்கும் அளவிற்கு தண்ணீர் கசிய துவக்கி உள்ளது. இதன் காரணமாக பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் பலம் இழந்து வருவதாகவும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் தண்ணீர் கசிவுகளை கண்டறிந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.