ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ் (வயது 22). இவர் பூமலூர் ஊராட்சி கிடாதுறைபுதூர் பகுதியில் உள்ள தனியார் நூல்மில்லில் தங்கி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனியார் நூல்மில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.