எழுத்தாளர்களுக்கு இலக்கிய விருதுகள்

68பார்த்தது
எழுத்தாளர்களுக்கு இலக்கிய விருதுகள்
திருப்பூர் தமிழ் சங்கம் சார்பில் எழுத்தாளர்களுக்கு இலக்கிய விருதுகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் வழங்கினார். திருப்பூர் தமிழ்சங்கத்தின் 31-ம் ஆண்டு விழா மற்றும் 2022- ம் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் பரிச ளிப்பு விழா திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலா யுதசாமி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் திருப்பூர் தமிழ் சங்கத்தின் செயலாளர் மோகன் கார்த்திக் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் தலைவர் முருகநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் கலந்து கொண்டு எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். அவர் பழமையான நூல்களை மேற்கோள் காட்டி பேசும் போது கூறியதாவது: -வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நம் மண்ணை சார்ந்தவர்கள் போதித்தார்கள். அறச்சிந்தனை மிக்க வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தீர்களா னால் அந்த வாழ்க்கை தானாகவே உங்களை உயர்த்தும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என சொல்லிய ஒரே இனம் தமிழ்டுளம், தமிழுக்கு இணையான மொழி எதுவும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் புதினம்(நாவல்) பிரிவில் 'க்ளிக்' ஆசிரியர் மாதவ ராஜுக்கு முதல் பரிசும், ஆசிரியர் எம். நராயணன் என்கிற முகிலனுக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட்டது. இதேபோல் பிற பிரிவுகளில் முதல் பரிசு ஆசிரியர்கள் திருமலை, சின்மய சுந்தரன், இந்திரநீலன் சுரேஷ் ஆகியோருக்கும், 2-ம் பரிசு கா. சு. வேலாயுதன், கொ. மா. கோதண்டம், பல்லவிகுமார் ஆகி யோருக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக சிறுமிகளின் பல் வேறு நடன நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் திருப்பூர் தமிழ் சங்கத்தின் துணை தலைவர் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் அரிமா ஜீவானந்தம், பொருளாளர் முருகேசன், விகாஸ் வித்யாலயா பள்ளி குழும தாளாளர் ஆண்டவர் ராமசாமி. காங்கிரஸ் கட்சி திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ் ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.