கொங்குநாடு விவசாயிகள் கட்சி மாநில தலைவர் அறிக்கை

73பார்த்தது
கொங்குநாடு விவசாயிகள் கட்சி மாநில தலைவர் அறிக்கை
மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ரூ. 1. 52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 25 ஆயிரம் கோடி அதிகமாகும். இது ஒருவகையில் வரவேற்கத்தக்கது. ஆனாலும் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான அறிவிப்பு வெளி யாகி இருந்தால் விவசாயிகளின் வாழ்வாதா ரம் மேம்படவும் உறுதுணையாக அமைந்தி ருக்கும். பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் சம்பந்தமாக ஒரு கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியிருப்பது மகிழ்ச் சியை ஏற்படுத்துகிறது. விவசாயத்தை டிஜிட் டல் மயமாக்கும் அறிவிப்புகளும் இடம் பெற் றிருப்பதை கொங்குநாடு விவசாயிகள் கட்சி வரவேற்கிறது. விவசாயிகளின் கோரிக்கை களை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் சாதகமான அம்சங்கள் இல்லாதது ஏமாற் றத்தை அளிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.

தொடர்புடைய செய்தி