திருப்பூரில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
திருப்பூர் மாநகரில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி முதல் லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில் இரவு 9 மணி அளவில் கனமழை பெய்ய துவங்கியது. திருப்பூர் மாநகரில் ராயபுரம், அரண்மனை புதூர், கருவம்பாளையம், பாரப்பாளையம், ஆண்டிபாளையம், மங்கலம், மன்னரை, ராக்கியாபாளையம், வீரபாண்டி, காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மேலும் மாவட்டத்தில் அவிநாசி பல்லடம் காங்கேயம் தாராபுரம் உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.