கைத்தறி ரகங்கள் 30 சதவீத தள்ளுபடி காட்சிப்படுத்தப்பட்டது.

68பார்த்தது
எதிர் வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்யும் நோக்கில் ஹத்கர்கா மேளா திட்டத்தின் கீழ் 15 நாட்கள் நடைபெறும் கைத்தறி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் வெளி மாநிலங்களில் இருந்து புகழ்பெற்ற சத்தீஸ்கர் கோசா சேலை மங்களகிரி கைத்தறி சேலைகள் மற்றும் ஆடை ரகங்கள் உத்திர பிரதேச கைத்தறி சேலைகள், ஜார்கண்ட் பட்டு சேலைகள் மற்றும் தமிழகத்தில் புகழ்வாய்ந்த புவிசார் கூறியீடு பெற்ற கோவை கோரா காட்டன், சேலம் வெண்பட்டு வேட்டி, காஞ்சிபுரம் பட்டு, திருபுவனம் பட்டு சேலை, திருநெல்வேலி செடிபுட்டா சேலை, ஈரோடு பவானி ஜமுக்காளம் உள்ளிட்ட கைத்தறி ரகங்கள் 30 சதவீத தள்ளுபடியுடன் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கைவினை பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு‌. பெ. சாமிநாதன் இணைந்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி