கட்டுமான பொருட்களின் கண்காட்சி வருகின்ற 5ம் தேதி துவக்கம்.

50பார்த்தது
திருப்பூர் மாவட்ட கட்டடப் பொறியாளர்கள் சங்கம் சார்பாக வருடம் தோறும் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் புதிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டடங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்த அறிமுக விழாவாகவும் இந்த கண்காட்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகின்ற 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை கட்டுமான பொருட்களின் கண்காட்சி நடக்கிறது. 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பசுமை சார்ந்த கட்டிடங்கள் மற்றும் மரபு சார்ந்த கட்டிடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் , பொதுமக்கள் கட்டிடங்களுக்கு தேவையான அனைத்து வகை சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வர்த்தகர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு இடையே இணைப்பு பாலமாக இருக்கக்கூடிய வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் , இதன் மூலம் இந்த ஆண்டு வர்த்தகத்தில் சிறந்து விளங்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை மாநில

தொடர்புடைய செய்தி