முன்னாள் படைவீரர் மாணவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்

82பார்த்தது
முன்னாள் படைவீரர் மாணவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்
தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை 2024-25-ம் கல்வி ஆண்டுக்கு வழங்கப்பட உள்ளது.

ஒரு வருடத்துக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ. 30 ஆயிரம், மாணவிகளுக்கு ரூ. 36 ஆயி ரம் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப் பிக்க நவம்பர் மாதம் 30-ந் தேதி கடைசிநாளாகும். www. ksb. gov. in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421 2971127எண்ணிலோதொடர்பு கொள்ளலாம். இந்த தக வலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி