கோவிந்தா பாடல் பாடிகாதில் பூக்களை சுற்றிகொண்டு ஆர்ப்பாட்டம்.

56பார்த்தது
மத்திய பட்ஜெட்- கோவிந்தா கோவிந்தா பாடல் பாடி காதில் பூக்களை சுற்றி கொண்டு திருப்பூரில் ஆர்ப்பாட்டம்.

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் நிதிகள் தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதிகளை போல் தமிழ்நாடு வெள்ள நிவாரணத்திற்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் பெரியார் சிலை முன்பு அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் மூலம் ஒன்றிய அரசும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழ்நாட்டு மக்கள் காதில் பூச்சுற்றி விட்டதாக கூறி காதில் பூக்களை சுற்றிக்கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவிந்தா கோவிந்தா பாடல்களை பாடி தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கபடாததை சுட்டிக்காட்டினர்.

தொடர்புடைய செய்தி