திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 25). கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது பாளையக்காட்டில் 2 பேர் அவரை வழிமறித்து வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் தகராறு முற்றி, 2 பேரும் சேர்ந்து கத்தியால் பாஸ்கரின் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் காயமடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த கார்த்திக்(24), முனியசாமி(20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களுடன் தொடர்புடைய அருண் குமார் (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.