15 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீசார் நடவடிக்கை

540பார்த்தது
திருப்பூர் மாநகரில் 4 வருடகாலமாக தங்கி இருந்து பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டு அரசின் தடை செய்யப்பட்ட பொருளான கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து பின்னலாடை தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்த ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஆத்து பாளையம் பகுதியில் திடீர் தணிக்கை செய்தபோது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒடிசாவை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் பதுக்கி வைத்து இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 15 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் தான் தொடர்ந்து இதுபோன்று கஞ்சாவை ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கடத்தி வந்து பின்னலாடை தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் துறை துணை ஆணையர் ராஜராஜன் பறிமுதல் செய்யப்பட்ட 15 கிலோ கஞ்ஜா பொருளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் பிரபா தேவி மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி