பிரபல ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளங்கள் கூட்டாக இணைந்து ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான 'ஜியோஹாட்ஸ்டார்' என்ற தளத்தை இன்று (பிப்.14) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளங்களின் சந்தாதாரர்களாக உள்ளவர்கள் ஜியோஹாட்ஸ்டாரை தடையின்றி பழைய சந்தாவுடன் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஜியோஸ்டார் உருவாக்கப்பட்ட நிலையில், இப்போது அதற்கான செயலி லான்ச் செய்யப்பட்டுள்ளது.