தமிழ் சினிமாவில், மாஸ்கோவின் காவிரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ராகுல் ரவீந்திரன். வணக்கம் சென்னை, U-Turn, சீதா ராமம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர், பிரபல பாடகி சின்மயி-ன் கணவராகும். ராகுல் ரவீந்திரனின் தந்தை ரவீந்திரன் நரசிம்மா, நேற்றைய முன்தினம் காலமானார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எங்கள் நினைவுகளில் நீங்கள் உயிருடன் இருப்பீர்கள் அப்பா. என்றென்றும் உன்னை நேசிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.