அதிமுகவின் மூத்த தலைவராக இருக்கும் செங்கோட்டையன், தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பேட்டிகளும் அதை உறுதி செய்கின்றன. அதிமுகவில் திடீர் சலசலப்பு எழுந்துள்ள நிலையில், அதிமுக மூத்த தலைவர் கே.பி முனுசாமி கிருஷ்ணகிரியில் இன்று (பிப்.14) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மூத்த தலைவரான செங்கோட்டையன் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதிமுகவிற்கு உறுதுணையாக இருப்பார் எனக் கூறினார்.