மாவட்ட தொழில் மையம் மூலமாக 1, 174 பேருக்கு ரூ. 401 கோடிகடனுதவி

53பார்த்தது
மாவட்ட தொழில் மையம் மூலமாக 1, 174 பேருக்கு ரூ. 401 கோடி
கடனுதவி

திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பின்னலாடை நிறுவனத்தை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். அதன்படி, விஷ்ணு பிரபு என்பவர் இந்த திட்டத்தின் கீழ் ரூ. 45 லட்சத்து 92 ஆயிரம் மானியத்தில் ரூ. 1 கோடியே 86 லட்சம் தொழில் கடன் பெற்று திருப்பூர் முருகம்பாளையம் பகவதி நகரில் பின் னலாடை தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தை 'நிறைந்தது மனம்' என்ற நிகழ்ச்சி மூலமாக கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த தொழில் நிறுவனத்தின் மூலம் 20 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் இதுவரை 1, 174 பேருக்கு ரூ. 66 கோடியே 16 லட்சம் மானியத்தில் ரூ. 401 கோடியே 14 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட தொழில் மைய மேலாளர் கார்த்திக வாசன், உதவி இயக்குனர் கிரீசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி