சிறுத்தை நடமாட்டம்? தொடரும் சோதனை

6395பார்த்தது
சிறுத்தை நடமாட்டம்? தொடரும் சோதனை
பொங்கலூரை அடுத்த கள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதாக அந்த பகுதியைச் சேர்ந்த ம. தி. மு. க நிர் வாகி புத்தெரிச்சல் மணி தெரிவித்தார். இதனை தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர ஆய்வு மேற் கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த பகுதி யில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மேலும் அந்த பகுதியில் காலடித்தடங்களை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் இல்லை என்றும் தெளிவாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பொங்கலூரை அடுத்த சிங் கனூர் மற்றும் வலசுப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட் டம் இருப்பதாகவும், ஒரு ஆட்டுக்குட்டியை கவ்வி பிடிப்பது போன்று சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. காலை யில் சிறுத்தை ஒரு பள்ளியின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகா ரிகளிடம் கேட்ட பொழுது, நாங்கள் தொடர்ந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆனால் சிறுத்தை இருப்ப தற்கான எந்த அறிகுறியும் இல்லை. உறுதிப்படுத்தப்படாத தக வல்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டு பொதுமக்களி டையே தேவையற்ற ஒரு அச்சத்தை சிலர் ஏற்படுத்தி வருவ தாக இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி