சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை ஐசிசி இன்று (பிப்.07) வெளியிட்டுள்ளது. ஜீத்தோ பாஸி கேல் கே என்ற போட்டிக்கான பாடலை பாகிஸ்தான் பாடகர் அதிஃப் அஸ்லம் பாடி அதில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் மற்றும் பாகிஸ்தான் படங்களில் பின்னணி பாடகராக இருந்தவர். பிரபலமான அதிஃப் அஸ்லமுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்பாடல் வரிகளை அட்னான் தூல் மற்றும் அஸ்பாண்ட்யார் அசாத் எழுதியுள்ளனர்.