தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை, மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் சீண்டல் சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை உடனே பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் இச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.