ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.05ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்படுவதை ஒட்டி வாக்கு எண்ணும் மையத்திற்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 78 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 183 போலீசார், துணை ராணுவத்தினர் சுழச்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி இருவரும் போட்டியிட்டனர்.