அபுதாபியில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சாரத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இரவு பகல் என இரண்டு வேளைகளிலும் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்க பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த உற்பத்தி 5.2 ஜிகாவாட் ஆகும். உற்பத்தியாகும் மின்சாரம் 7.5 லட்சம் வீடுகளுக்கு போதுமானது. ஒரு ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 18.8 லட்சம் சூரிய மின் தகடுகள் தேவைப்படும் நிலையில் 5.2 ஜிகா வாட் மின்சார உற்பத்திக்கு ஒரு கோடி தகடுகள் தேவைப்படும்.