மெக்சிகோ நாட்டில் முற்றிலும் வித்தியாசமான தோற்றம் கொண்ட டைனோசரின் தொல் எச்சம் கிடைத்துள்ளது. இது சுமார் 7.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என தொல்லியலாளர்கள் கணித்துள்ளனர். இது ஆர்னிதோமிமிடே குடும்பத்தைச் சேர்ந்தது. 10 அடி உயரம் கொண்ட இதன் அலகுகள் பறவைகள் போல் நீண்டிருந்தது. நீண்ட கழுத்து, சிறிய மண்டை ஓடு, இறக்கைகளுடன் பார்ப்பதற்கு அப்படியே இன்றைக்கு உள்ள நெருப்புக்கோழி போல் உள்ளது.