பொங்கலூரை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் காமநாயக் கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த புறக்காவல் நிலைய கட்டி டம் சாலை விரிவாக்கத்தின் போது இடிக்கப்பட்டது. அதன் பின் னர் அந்த புறக்காவல் நிலையம் புதிதாக கட்டப்பட்டு செயல் பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. எனவே அங்கு போலீசார் நியமிக்கப்படாமல் புறக்காவல் நிலையம் செயல்பாட்டுக்கு வரா மல் உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உடன டியாக இங்கே செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பெங்கலூரிலும் அவினாசி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கையை வைத்து வருகிறார்கள். எனவே இந்த கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து புறக்காவல் நிலையம் அமைக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என் றும் கோரிக்கை வைத்துள்ளனர்.