திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கருச்சிதைவு நோய் தடுக்க புரூசெல்லோசிஸ் தடுப்பூசி போடும் முகாம் குமரலிங்கத்தில் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு இயக்குனர் ஜெயராம் தலைமை வகித்தார். கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் உதவி மருத்துவ பிரகாஷ் ஆய்வாளர்கள் கார்த்தி பத்மா கலந்து கொண்டனர் மலர்ந்து 4 மாதம் முதல் 8 மாதமான கிடாரி கன்றுகளுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் கருச்சிதைவிலிருந்து பாதுகாக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.