திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது இந்த நிலையில் உடுமலை சந்தையில் 14 கிலோ போன்ற பெட்டி 700 முதல் விற்று வந்த நிலையில் தற்பொழுது 180 கீழ் விற்பனையாக வருகின்றது அதிலும் சுமாராக தக்காளிப்பழங்கள்
பாதி விலைக்கு கூட விற்பனையாக வில்லை. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத காரணத்தால் தற்போது சாலை யோரங்களில் வீசி வருகின்றனர் எனவே விவசாயிகளை நீண்ட நாள் கோரிக்கையான குளிர்சாதன கிடங்கு மதிப்பு கூட்டப் பொருட்கள் தயாரிக்க தேவையான அறிவுரை மற்றும் ஷாம் ஜூஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்