திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் இன்று நடைபெற்றது.
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்,
அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கிட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது. தாலுகா செயலாளர் வடிவேல் தலைமையில்,
வீரப்பன், ராஜரத்தினம், பன்னீர்செல்வம், ராதா, கே. ஈஸ்வரன், மாசாணம், வி. ஏ. ஈஸ்வரன், ராஜகோபால், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.