கேரளா: சபரிமலையில் இருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த தமிழக ஐயப்ப பக்தர்களின் பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தமிழக-கேரளா எல்லையான ஆரியங்காவு பகுதியில் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.