மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்

60பார்த்தது
மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிலர் இந்த அறிவிப்பை போர் படுத்தாமல், இருசக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு இடையூறு தரும் விதமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை பேரூராட்சி நிர்வாகம் இதை கண்டும் காணாமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டேக்ஸ் :