மடத்துக்குளம்: வீணாகும் தண்ணீர்? தடுப்பணை அமைக்க கோரிக்கை

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் பகுதியில்,
அமராவதி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், குதிரை ஆறு அணையில் இருந்துவெளியேறும் உபரி நீர் இரண்டும் குடும்பம் பகுதியில் கலந்து செல்கிறது. இவை விவசாயத்திற்கும் பொது மக்களுக்கும் பயனற்று வீணாகி செல்கிறது.
இந்த இடத்தில் தடுப்பணைகள் கட்டினால் வீணாகும் தண்ணீரை தடுக்க முடியும் என
தடுப்பணைகள் கட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும்
2022- 2023 சட்டமன்றத்தில்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் ஆயிரம் தடுப்பணைகள் தமிழகம் முழுவதும் கட்டப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார். அதில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்தி