திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி ஒட்டுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் தற்போது ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவு படர்ந்துள்ளன. இவ்வாறான செடிகள் அதிகளவு தொடர்ந்து இருப்பதால் தண்ணீர் திறக்கும் போது மதங்களில் சிக்கி அடைப்பு ஏற்படுகின்றது. மேலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறைகள் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.