துபாயில் நடந்துவரும் CT2025 முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் இங்கிலீஸின் கேட்சை பிடித்த கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகள் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக இப்பட்டியலில் ராகுல் டிராவிட்(334) முதலிடம் வகித்தார். இதேபோல் பேட்டிங்கில் ஒரு சிக்சரை விளாசிய ரோஹித், ஐசிசி தொடர்களில் அதிக சிக்சர்கள் (65) விளாசிய வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் (64) சாதனையை முறியடித்தார்.