திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு கனமழை பெய்த காரணத்தால் விவசாயிகளும் கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 22 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.